தரக்குறைவாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்! சூப்பர் ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கும் பிரபல நடிகர்! கட்சியில் இணைப்பு, தேர்தல் பிரச்சாரம்?
அண்ணாத்த படப்பிடிப்பில் பாதுகாப்பு வழிமுறைகளுடன் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்படக்குழுவில் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியானதால் உடனே சென்னைக்கு திரும்பினார்.
அவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் நோய் தொற்று இல்லை என தெரிந்துவிட்டது. இருந்த போதிலும் மீண்டும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைவில் அவர் சோதனை செய்து கொண்டதிலும் கொரொனாவுக்கான எந்த அறிகுறிகளும் இல்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
அவருக்காக மீண்டும் அவரின் ரசிகர்கள் மிகுந்த பிரார்த்தனையில் ஈடுப்பட்டுள்ளார்கள். அண்மையில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினி தன் பிறந்த நாளை கொண்டாடினார்.
இந்நிலையில் அவருக்கு டிசம்பர் 30 ல் மதுரைக்கு வருவதாகவும், 31 ம் தேதி கட்சியை அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் தேர்தல் பேச்சு வசனங்கள் மிகவும் பிரபலமாகின.
இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி இப்போ இல்லைன்னா எப்பவும் இல்ல என்ற வசனம் பதிக்கப்பட்ட டி சர்ட் அணிந்து, ரஜினியின் பாபா முத்திரை காட்டி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.
இதனால் ரசிகர்கள் அவர் ரஜினியின் கட்சியில் இணைகிறாரா, பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா என்றெல்லாம் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
மேலும் ரஜினியை பிடிக்காத சிலர் ரஜினியை தரக்குறைவாக விமர்சிப்பதோடு பிரேம் ஜியையும் கண்டபடி பேசி வருகின்றனர்.
Thanks a lot @Colourcrafts1 for gifting me THALAIVAR @rajinikanth T-shirt ? pic.twitter.com/QHAo8XqnXO
— PREMGI (@Premgiamaren) December 26, 2020
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan