கடையில் திருடிய சாச்சனா.. பிக் பாஸில் அவரே உளரியதால் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
பிக் பாஸ் 8ம் சீசன் தொடங்கி இரண்டு வாரங்கள் நிறைவடைந்து இருக்கிறது. ஷோ தொடங்கிய முதல் நாளே ஒரு எலிமிநேஷன் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் சாச்சனா தான் எலிமினேட் ஆனார்.
மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்த அவரை 24 மணி நேரத்தில் வெளியேற்றியது தவறு என நெட்டிசன்கள் குரல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து சில தினங்களில் மீண்டும் வீட்டுக்குள் அனுப்பப்பட்டார் அவர்.
ஆனால் ரீஎன்ட்ரி செய்தபின் அவர் நடந்துகொள்ளும் விதத்தை பார்த்து நெட்டிசன்கள் அவரை அதிகம் விமர்சித்து வருகின்றனர். சின்ன விஷயங்களுக்கு கூட நீண்ட நேரம் அழுது கொண்டிருக்கிறார் என பலரும் ட்ரோல் செய்கின்றனர்.
திருட்டு
இந்நிலையில் சாச்சனா தான் கடை ஒன்றில் செயின் திருடியது பற்றி மற்ற பெண் போட்டியாளர்களிடம் கூறியிருக்கிறார். "350 ரூபாய் காசு கொடுத்து ஒரு செயின் வாங்கினேன். இரண்டு நாளில் அது காணாமல் போய்விட்டது."
அதற்கு பிறகு மீண்டும் வாங்க காசு இல்லாததால் கடையில் செயின் ஒன்றை எடுத்து பாக்கெட்டில் போட்டு திருடிக்கொண்டு வந்ததாக சாச்சனா கூறியதை கேட்டு ஜாக்குலின் உள்ளிட்ட மற்ற பெண் போட்டியாளர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
அந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் சாச்சனாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Enna simran idhellam 😡 Adhum national
— Imadh (@MSimath) October 20, 2024
Media la 🤦🏻♂️#biggbosstamil #biggbosstamil8 #Sachana pic.twitter.com/Vn3XIR7mGe