நெற்றிக்கண் திரைவிமர்சனம்
நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள திரைப்படம், நெற்றிக்கண். மூக்குத்தி அம்மன் படத்தை தொடர்ந்து நயன்தாராவின், இந்த படமும் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகியுள்ளது. ஆனால், மூக்குத்தி அம்மன் போல், நெற்றிக்கண் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க பார்க்கலாம்..
கதைக்களம்
படத்தின் துவக்கத்தில் தனது தம்பியை, தவறான விஷயங்களிளிடம் இருந்தும், தவறான நண்பருடங்களுடனும் சேரக்கை வைத்துக்கொள்ள கூடாது என்று கண்டிக்கும், சிபிஐ அதிகாரியாக என்ட்ரி கொடுக்கிறார் நடிகை நயன்தாரா.
அப்படி, க்ளப்பில் இருந்து தனது தம்பியை, கண்டிப்புடன் இழுத்து செல்லும் பொழுது, கார் விபத்து ஏற்படுகிறது. இதில் காரில் இருந்து வெளியே விழுந்த நயன்தாரா தனது கண்களை இழக்கிறார். ஆனால், காருக்குள் சிக்கிக்கொள்ளும் நயன்தாராவின் தம்பி, விபத்திலேயே உயிரிழக்கிறார்.
அதன்பின், கண்கள் தெரியாமல் 2 வருடங்களை கடந்த வந்த நயன்தாரா, தனது கண் ஆபரேஷனுக்காக காத்துகொண்டு இருக்கிறார். ஆனால், நடக்கும் என்று அவர் எதிர்பார்த்த ஆபரேஷன், கண் தானாம் கிடைக்காததால் தள்ளிபோய்க்கொண்டே இருக்கிறது.
இது ஒரு புறம் இருக்க, கதையின் மற்றொரு புறம், பல பெண்களை கடத்தி அணுஅணுவாக சித்ரவதை செய்து, கற்பழித்து வருகிறார் நடிகர் அஜ்மல். இந்த சூழலில், கண் தெரியாமல், தனது டேக்ஸிக்காக காத்துக்கொண்டிருக்கும் நயன்தாராவை பார்க்கும் அஜ்மல், அவரை கடத்த முயற்சி செய்கிறார்.
ஆனால், அதிலிருந்து நயன்தாரா தப்பித்துவிடுகிறார். அதன்பின் காவல் துறையை அணுகி தனக்கு நடந்தை கூறும் நயன்தாராவிடம், வாக்குமூலம் வாங்குகிறார், SI மணிகண்டன். இந்த கேஸ் மூலம் தனக்கு ப்ரோமோஷன் கிடைக்கும் என்ற நோக்கத்துடன், முழுவீச்சில் நயன்தாராவுடன் இணைந்து இந்த கேஸை விசாரிக்கிறார்.
அப்போது, துப்பு கொடுக்க வருகிறார் நடிகர் சரண். அவரது குரல் தனது தம்பி போல் இருப்பதால், அவர் மேல் பாசம் வைக்கிறார் நயன்தாரா. முதலில் நயன்தாராவுடன் இணைய மறுக்கும் சரண், ஒரு கட்டத்தில் நயந்தாராவை, அஜ்மலிடம் இருந்து காப்பாற்ற நயன்தாராவிற்கு உதவி செய்கிறார்.
அஜ்மலிடம் இருந்து இரண்டு முறை தப்பித்த நயன்தாரா, மீண்டும் அஜ்மலை பிடித்தாரா? இல்லையா? அஜ்மலிடம் சிறைப்பட்டு இருக்கும் பெண்களை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை..
படத்தை பற்றிய அலசல்
கண் பார்வையற்றவராக நடித்துள்ள நயன்தாரா, நடிப்பில் மிரட்டியுள்ளார். நெற்றிக்கண் எனும் தலைப்புக்கு ஏற்றார் போல், அமைத்திருக்கும் அவரது இயற்கையான நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.
அதே போல், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஜ்மல் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். போலீஸ் காரராக வரும் மணிகண்டன் மற்றும் நடிகர் சரண், இருவரும் தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.
கொரியன் ரீமேக் படமாக இருந்தாலும், நம் தமிழ் சினிமாவிற்கு ஏற்றார் போல் சில விஷயங்களை அழகாக செய்துள்ளார் இயக்குனர் மிலிந்த் ராவ். ஆனால், படத்தில் திரைக்கதை கொஞ்சம் போர் அடிக்கிறது. திரைக்கதையில் கொஞ்சம் விறுவிறுப்பை கூடியிருந்திருக்கலாம்.
இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்த, அதே சைக்கோ படங்கள் போலவே திரைக்கதை அமைத்துள்ளது. கிரிஷ், கோபாலகிருஷ்ணனின், பாடல்கள் மற்றும் பின்னணி இசை அருமை. ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்கு வலுசேர்க்கிறது.
க்ளாப்ஸ்
நயன்தாரா, அஜ்மல் நடிப்பு
பாடல்கள், பின்னணி இசை
ஒளிப்பதிவு
பல்ப்ஸ்
திரைக்கதை
படத்தின் நீளம்
மொத்தத்தில் நெற்றிக்கண், பார்க்கலாம்..