கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா?
கண்மணி அன்புடன்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட சீரியல் கண்மணி அன்புடன்.
இரு தோழிகளின் அன்பை காட்டும் விதமாக ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் ரசிகர்களின் ஆதரவோடு ஓடிக் கொண்டிருக்கிறது.
300 எபிசோடுகளை தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அன்பு-கண்மணி ஜோடி பிரிந்துள்ளார்கள்.

அன்புவை சுத்தமாக வெறுக்கும் கண்மணி இப்போது இடியாப்பம், பிரியாணி போன்று தனது சமையல் திறமையை வெளிக்காட்டி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார்.
நியூ என்ட்ரி
தற்போது ராஜேஸ்வரி கிட்சனில் அடுத்தடுத்து கரப்பான் பூச்சி, பல்லி போன்றவைகள் இருக்க அவரது தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் அன்புவால் என அவரது அப்பா குற்றம் சாட்டி வருகிறார். இன்னொரு பக்கம் கண்மணிக்கு இடியாப்பம் தொழில் அமோகமாக கை கொடுக்க இப்போது தனது தோழி உதவியுடன் மிட்நைட் பிரியாணி துவங்கியுள்ளார்.
இப்படி கதை அன்புவா- கண்மணியா என போட்டி இருக்க புதிய நடிகர் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.
பூங்காற்று திரும்புமா சீரியலில் கொடூர வில்லனாக நடித்த இஷான் ஷ்யாம் தற்போது கண்மணி அன்புடன் சீரியலில் நியூ என்ட்ரி கொடுக்க உள்ளாராம். ஆனால் எப்படிபட்ட கதாபாத்திரம் என எந்த விவரமும் தெரியவில்லை.

Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan