ஜீ தமிழின் அண்ணா சீரியலில் கெத்தாக என்ட்ரி கொடுக்கப்போகும் பிரபல நடிகர்... யார் தெரியுமா?
அண்ணா சீரியல்
ஜீ தமிழ் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.
அவர்களின் ரசனைக்கு ஏற்ப இந்த தொலைக்காட்சியில் நிறைய புத்தம்புதிய தொடர்கள் களமிறங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றன. அப்படி ஜீ டிவியில் டாப்பில் இருக்கும் தொடர்களில் ஒன்று தான் அண்ணா தொடர்.
துர்கா சரவணன் இயக்க, கடந்த 2023ம் வருடம் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் இதுவரை 400 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வருகிறது.

லேட்டஸ்ட் என்ட்ரி
மிர்ச்சி செந்தில், நித்யா ராம் முக்கிய நாயகன்-நாயகியாக நடிக்க அண்ணன்-தங்கைகளின் பாசத்தை உணர்த்தும் வகையில் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது இந்த தொடரில் லேட்டஸ்ட் என்ட்ரியாக ஒரு நடிகர் நுழைகிறார்.
அவர் வேறுயாரும் இல்லை, பிரபல நடிகர் ஈஸ்வர் தானாம். இந்த தகவலை அவரே தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri