ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா?
ஹார்ட் பீட் 3
திரையரங்கிற்கு சென்று படங்கள் பார்க்க தனி கூட்டம் இருக்கிறது என்றால் ஒடிடியில் படங்கள், வெப் தொடர்கள் பார்க்கும் ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்துள்ளது.
எனவே நிறைய வித்தியாசமான கதைக்களம் கொண்ட வெப் தொடர்கள் அதிகம் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பெரும்பாலான பார்வையாளர்களின் பேராதரவை பெற்றது ஹார்ட் பீட் வெப் தொடர். நேற்று ஜுலை 30 முதல் ஹார்ட் பீட் 3வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியுள்ளது.

கடந்த 2024ம் ஆண்டு முதல் சீசன் ஒளிபரப்பானது, 2வது சீசன் 2025ம் ஆண்டு தொடங்கப்பட்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது.
விஜய் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பான இந்த தொடர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.

புதிய என்ட்ரி
தீபக் சுந்தர்ராஜன் கதை, திரைக்கதை எழுதி இயக்க தீபா பாலு, அனுமோல், கார்த்திக் குமார், சாருகேஷ் எம், அஸ்வதி அக்னிஹோத்ரி, சபரீஷ், அமித் பார்கவ், யோகலட்சுமி, மோகன்ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஆனால் இந்த 3வது சீசனில் இருந்து ஏகப்பட்ட நடிகர்கள் வெளியேறியுள்ளனர். தற்போது என்ன தகவல் என்றால் ஹார்ட் பீட் 3ல் அனு கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை காயத்ரி கமிட்டாகியுள்ளாராம்.
