விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் மகாநதி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை.. யாரு தெரியுமா?
மகாநதி
விஜய் தொலைக்காட்சியில் இளைஞர்கள கவரும் வண்ணம் நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி இப்போது ரசிகர்களால் Vika Vika என புலம்ப வைக்கும் தொடராக ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி சீரியல். கடந்த ஜனவரி 2023ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த தொடர் 500 எபிசோடுகளை தாண்டி ஒளிபரப்பாகிறது.
சமீபத்தில் இந்த தொடர் 500 எபிசோடுகளை எட்டியதால் சீரியல் குழுவினர் ஸ்பெஷல் நிகழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.
கதையில் காவேரி-வீஜய் பிரிய அடுத்து என்ன நடக்கப்போகிறது என்கிற எதிர்ப்பார்ப்பில் தான் ரசிகர்கள் உள்ளார்கள். தற்போது இந்த சீரியலில் புதிய என்ட்ரியாக ஒரு நடிகை வருகிறார்.
அவர் யார் என்றால் நடிகை கவிதா தான் புதியதான என்ட்ரி கொடுக்கிறார். ஆனால் அவர் என்ன கதாபாத்திரம் என எந்த விவரமும் தெரியவில்லை.