விஜய் டிவியின் மகாநதி சீரியலில் புதிய என்ட்ரி கொடுத்துள்ள இளம் நடிகை.. யாரு தெரியுமா?
மகாநதி
விஜய் டிவியில் இளம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட தொடராக ஒளிபரப்பாகி வருகிறது மகாநதி தொடர்.
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்கும் இந்த தொடரில் நடிப்பவர்கள் பலர் இளம் நடிகர்கள் தான். இதனாலேயே இந்த தொடருக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
புதிய என்ட்ரி
இப்போது கதையில் நர்மதா பெரிய பெண்ணாக வீட்டில் கொண்டாட்டம் நடந்து வருகிறது. அவருக்கு சீர் செய்ய விஜய் மேள தாளத்துடன் பட்டாசு வெடித்து வீட்டிற்கு வருகிறார்.
அவரது இந்த செயலை கண்டு சாரதா செம கோபப்படுகிறார். தற்போது வெளிவந்துள்ள புதிய புரொமோவில் காவேரி கர்ப்பமாக இருப்பதாக சந்தேகப்படுகிறார், இதனால் அவர் தனது தோழிக்கு போன் செய்து பேசுகிறார்.
அவரின் தோழியாக விஜய் டிவியின் சக்திவேல் சீரியலில் நடித்து வரும் ரேஷ்மா பிரசாத் நடிக்க என்ட்ரி கொடுத்துள்ளார்.