பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
விஜய் டிவியில் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2.
பொய் சொல்லியதால் மயிலை வீட்டைவிட்டு பாண்டியன் அனுப்ப அதே வேகத்தில் சரவணன் தனது மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைத்துவிட்டார். இதனால் கோபத்தில் மயில் அம்மா வழக்கம் போல் பொய் புகார் போலீஸ் நிலையத்தில் கொடுத்தார்.
இதனால் பாண்டியன் குடும்பமே ஜெயிலுக்கு சென்றார்கள், பின் கோமதி அண்ணன்கள் சொன்ன சாட்சியால் ஜாமினில் வெளியே வந்தார்கள்.

மாற்றம்
இன்றைய எபிசோடில், மயில் அவ்வளவு தான் எனது வாழ்க்கை முடிந்தது, நீதிமன்றத்தில் மாமா எப்படி பேசினார் பார்த்தாயா, மீனா அப்போவே பொறுமையாக இருக்கச் சொன்னாள் என தனது அம்மாவிடம் அழுது புலம்புகிறார் மயில்.
ரோஹினி பற்றிய உண்மை தெரிந்ததும் விஜயா இல்லை, மனோஜ் செய்த ஷாக்கிங் விஷயம்... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட்
ஆனால் அவரோ உனது வாழ்க்கைக்காக தான் நான் இவ்வளவு போராடுகிறேன், எனது தாலியை வைத்து தான் வக்கீலுக்கு பணம் கொடுக்கனும், இப்படி கஷ்டப்படுவது உனக்காக தான் என எமோஷ்னலாக பேசுகிறார்.
இன்னொரு பக்கம் தனது அக்கா குடும்பம் கஷ்டத்தில் இருப்பதை தாங்க முடியாமல் வீட்டிற்கு வந்தார் பழனி. அவரை கண்டதும் தம்பியிடம் மன்னிப்பு கேட்டு அழுது புலம்புகிறார் கோமதி.

அதேபோல் பாண்டியன் வந்து பழனியிடம் மன்னிப்பு கேட்டு வருத்தமாக பேசுகிறார். இதில் என்ன மாற்றம் என்றால் பாண்டியனின் குரல் இன்றைய எபிசோடில் மாற்றப்பட்டுள்ளது.