விஜய் டிவியின் மகாநதி சீரியலில் திடீரென ஏற்பட்ட மாற்றம்... யார் பாருங்க
மகாநதி சீரியல்
விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை, அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, சின்ன மருமகள், மகாநதி, கண்மணி அன்புடன், சிந்து பைரவி போன்ற சீரியல்கள் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இப்போது சுட்டும் விழி சுடரே, அழகே அழகு, கனா கண்டேனடி போன்ற புத்தம் புதிய சீரியல்களும் இப்போது களமிறங்க உள்ளது.

மாற்றம்
தற்போது விஜய் டிவியில் ஒரு சீரியல் குறித்து தான் பரபரப்பாக பேசப்படுகிறது.
அதாவது மகாநதி சீரியல் தான், இதில் குமரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் கம்ருதீன். இவர் பிக்பாஸ் 9ல் கலந்துகொண்டு நல்ல பெயர் எடுப்பார் என்று பார்த்தால் ரெட் கார்டு வாங்கி வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.

அவர் இனி மகாநதி சீரியலில் நடிக்கவில்லை, சீரியல் குழுவினர் விலகிவிட்டனர் என தகவல் பரவி வருகிறது. இதற்கு இடையில் இன்றைய எபிசோடில், விஜய்யின் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்து வருபவரின் குரல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.