காற்றுக்கென்ன சீரியலில் திடீரென மாற்றப்பட்ட முக்கிய நடிகை- கடும் சோகத்தில் ரசிகர்கள்
காற்றுக்கென்ன வேலி
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் 500 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது காற்றுக்கென்ன வேலி தொடர்.
இளம் கலைஞர்கள் நடிக்க கல்லூரி கால கதைக்களத்தில், குடும்பம், காதல், நண்பர்கள், லட்சியம் என சில எமோஷன்கள் கதைக்களத்தில் அமைய மக்களின் பேராதரவை பெற்று வருகிறது.
இதில் பிரியங்கா மற்றும் சுவாமிநாதன் இருவரும் ஜோடியாக நடிக்க இவர்களது கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கிறது என ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
இப்போது நாயகன் மற்றும் நாயகி திருமண டிராக் ஓடுகிறது, இதில் என்னென்ன குழப்பங்கள் வரப்போகிறது என தெரியவில்லை.
மாற்றப்பட்ட நடிகை
இந்த தொடரில் சாரதா என்ற வேட்த்தில் ஜோதி என்பவர் நடித்து வந்தார், இவரது நடிப்பு மக்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது.
ஆனால் இப்போது என்னவென்றால் தொடரில் இருக்கு அவர் விலகியிருப்பதாகவும் அவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மல்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஹர்ஷா நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.
இதைக் கேள்விப்பட்டதும் ரசிகர்கள் இது தவறான தேர்வு, ஜோதி அழகாக நடித்து வந்தார், அவரை மாற்றாதீர்கள் என ரசிகர்கள் வருத்தமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அழகாக புடவையில் நடிகை தேவயானியை மிஞ்சும் அழகில் அவரது மகள்- லேட்டஸ்ட் க்ளிக்