குக் வித் கோமாளி 5 சீசனில் கோமாளியாக இணைந்துள்ள பிரபலம்... விஜய் டிவி பிரபலம் தான், யாரு பாருங்க
குக் வித் கோமாளி 5
குக் வித் கோமாளி, சிரிக்க மறந்த மக்களையும் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும் ஒரு ஷோ.
சமையல் நிகழ்ச்சி தான் என்றாலும் நிகழ்ச்சியில் நிறைய கலகலப்பு இருக்கும். முதல் சீசனிற்கு கிடைத்த பெரிய வரவேற்பு அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாக இப்போது 5வது சீசன் ஒளிபரப்பாகிறது.
5வது சீசனில் புதிய இயக்குனர், தயாரிப்பாளர், நடுவர் என நிறைய விஷயங்கள் புதியதாக அமைந்துள்ளது.
புதிய எண்ட்ரி
இதில் கோமாளியாக முதலில் கமிட்டான நாஞ்சில் விஜயன் சில காரணங்களால் வெளியேறினார், அவரை தொடர்ந்து பரீனா கோமாளியாக உள்ளே நுழைந்தார். அதோடு தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலையை கோமாளியாக மாற்றினார்கள்.
தற்போது என்னவென்றால் இந்த குக் வித் கோமாளி 5வது சீசனில் புதிய கோமாளியாக அறந்தாங்கி நிஷா என்ட்ரி கொடுக்கிறாராம்.
இந்த தகவல் வெளியாக அப்போ ஷோ இன்னும் கலக்கப்போகிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.