மகளே என் மருமகளே சீரியலின் புதிய இயக்குனர் இவர்தானா... விஜய் டிவி ஹிட் தொடர்களின் இயக்குனர் தான்..
மகளே என் மருமகளே
விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களின் கிங்காக இருந்தவர்கள் நாங்கள் சீரியலிலும் கலக்குவோம் என மாஸ் காட்டி வருகிறார்கள்.
இந்த தொலைக்காட்சியில் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, அய்யனார் துணை, சின்ன மருமகள், சிந்து பைரவி, பூங்காற்று திரும்புமா, தனம், மகாநதி, மகளே என் மருமகளே என தொடர்ந்து ஏகப்பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
சமீபத்தில் வெற்றிகரமாக ஓடிய ஆஹா கல்யாணம் தொடர் முடிவுக்கு வந்தது, சீரியல் முடிவது குறித்து ரசிகர்களும் தங்களது வருத்தத்தை தெரிவித்திருந்தனர்.
மாற்றம்
விஜய் தொலைக்காட்சியில் புதியதாக தொடங்கப்பட்ட தொடர்களில் ஒன்று மகளே என் மருமகளே.
தெலுங்கில் ஒளிபரப்பான Maguva O Maguva என்ற சீரியலின் தமிழ் ரீமேக் தான் இந்த தொடர். இதில் ரேஷ்மா பசுபுலேட்டி, வர்ஷினி, அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த சீரியலை இயக்கிவந்த நாராயணமூர்த்தி கடந்த மாதம் உயிரிழந்தார். தற்போது அவருக்கு பதிலாக மகளே என் மருமகளே சீரியலை ஹரிஷ் ஆதித்யா இயக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.
இவர் இதற்கு முன் காற்றுக்கென்ன வேலி, தங்கமகள் போன்ற சீரியல்களை இயக்கியுள்ளார்.