ஜீ தமிழில் விரைவில் வரப்போகும் புதிய ஹிந்தி டப்பிங் சீரியல்... எந்த தொடர் தெரியுமா?
ஜீ தமிழ்
சன் மற்றும் விஜய் டிவியை தொடர்ந்து ஜீ தமிழும் செம மாஸாக ஒளிபரப்பாகி வருகிறது.
கார்த்திகை தீபம், வீரா, சந்தியா ராகம், இதயம் 2, திருமாங்கல்யம், வாகை சூடவா என நிறைய தொடர்கள் டாப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலை தொடர்ந்து சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் என பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது

புதிய சீரியல்
ஜீ தமிழில் விதவிதமான கதைக்களம் கொண்டு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது, ரசிகர்களும் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.
தமிழில் உருவாக்கப்பட்டு ஒளிபரப்பாகும் இந்த சீரியல்களை தாண்டி இப்போது புத்தம்புதிய சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. ஆனால் தமிழில் உருவாக்கப்பட்ட சீரியல் இல்லை, ஹிந்தி டப்பிங் சீரியலாம்.
ஹிந்தியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் வசுதா என்ற சீரியல் தான் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது. வரும் திங்கள் முதல் சனி வரை மாலை 3.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.