சலங்கை ஒலி தொடர்ந்து ஜீ தமிழில் வரப்போகும் புதிய டப்பிங் சீரியல்... என்ன தொடர் பாருங்க
ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரையை எடுத்துக் கொண்டால் டிஆர்பியில் கெத்து காட்டி வருவது சன் மற்றும் விஜய் டிவி தான்.
ஒன்று சீரியல்களுக்கு பெயர் போனது, இன்னொன்று ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போனது. இவர்களுடன் மோத முடியவில்லை என்றாலும் தனக்கென ஒரு தனி பாதை அமைத்து டிஆர்பியை பிடித்து வருகிறது ஜீ தமிழ்.
சீரியல், ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார்கள்.
புதிய தொடர்
தமிழ் சீரியல்களை தாண்டி ஜீ தமிழ் இப்போது டப்பிங் சீரியல்களை ஒளிபரப்ப தொடங்கிவிட்டனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சலங்கை ஒலி என்ற டப்பிங் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது. தெலுங்கு ஜீ டிவியில் ஒளிபரப்பான மேகசந்தேம் என்ற சீரியல் தான் தமிழில் சலங்கை ஒலி என்ற பெயரில் ஒளிபரப்பாகிறது.
தற்போது என்ன தகவல் என்றால் ராஜா சின்ன ரோஜா என்ற டப்பிங் சீரியலையும் களமிறக்கியுள்ளனர். ஜீ தெலுங்கில் ஒளிபரப்பான Nindu Noorella Savaasam தொடரின் தமிழ் டப்பிங் தான் இந்த புதிய தொடராம்.