பாக்கியலட்சுமி சீரியலில் புதியதாக என்ட்ரீ கொடுத்த பிரபலம்?- யார் தெரியுமா, புகைப்படத்துடன் இதோ
பாக்கியலட்சுமி
விஜய் டிவியின் TRPயை இப்போது தூக்கி நிறுத்திக் கொண்டு இருப்பது பாக்கியலட்சுமி தொடர். பாக்கியா கோபியை விவாகரத்து செய்ததில் இருந்து கதைக்களம் மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
பாக்கியா இப்போது ரூ. 18 லட்சத்தை ஒரே மாதத்தில் திருப்பிக் கொடுக்கிறேன், நீங்கள் வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட வேண்டும் என கோபி மற்றும் ராதிகாவிடம் கூறியுள்ளார்.
எனவே இப்போது பாக்கியா பெரிய காண்டிராக்ட் எடுத்து ஒரு கல்யாணத்திற்கு சென்றுள்ளார்.
புதிய என்ட்ரீ
அந்த கல்யாண டிராக்கில் காமெடி நடிகர் தாடி பாலாஜி மற்றும் வென்கி என்ற நடிகர்கள் நியூ என்ட்ரி கொடுத்துள்ளனர். அவர்களின் டிராக் இன்றைய எபிசோடில் வந்துவிடும் என கூறப்படுகிறது.
சருமம் சிவப்பாக இருக்க நடிகை த்ரிஷா குடிக்கும் ஜுஸ் என்ன தெரியுமா?