சத்யா 2 சீரியலில் புதியதாக நடிக்க வந்த பிரபல நடிகை- அட இவங்க தானா, கலக்கல் லுக்
சன், விஜய், ஜீ இந்த 3 டிவிக்களின் சீரியல்கள் தான் மக்களிடம் அதிகம் பிரபலம். அதிலும் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்குள் தான் அதிக போட்டியே.
இத்தனை நாட்கள் ரோஜா மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல்கள் தான் டிஆர்பி போட்டியில் முன்னிலையில் அதிகம் வந்தன. இப்போது கடந்த சில வாரங்களாக சன் டிவியில் தொடங்கப்பட்டுள்ள கயல் சீரியல் முதல் இடத்தை பிடித்து வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் புதியதாக தொடங்கப்பட்ட ராஜபார்வை என்ற ஒரு தொடர் முடிவுக்கு வந்துள்ளது, இதில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தவர் ஆர்த்தி ராம். இவர் அந்த தொலைக்காட்சியிலேயே காற்றுக்கென்ன வேலி என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.
தற்போது இவர் மிகவும் வித்தியாசமான லுக்கில் புதிய சீரியலில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அது என்ன தொடர் என்றால் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சத்யா 2வில் தான் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த சீரியல் நாயகன் விஷ்ணுவுடன், ஆர்த்தி ராம் எடுத்த புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.