விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சன் டிவி சீரியல் நடிகர்... இனி ஜாலி தான்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று முத்து-மீனா பணத்தை ஏமாற்றியவரை தேடும் வேட்டையில் உள்ளனர்.
அதே சமயம் மீனாவிற்கு பணம் தேடிபோன இடத்தில் அவருக்கு பூ ஆர்டரும் கிடைக்கிறது. பின் வழக்கம் போல் விஜயா வீட்டில் மீனாவை வறுத்தெடுப்பதாக பேச கடைசியில் அவருக்கே அது நோஸ் கட்டாக அமைந்தது.
அடுத்து கதையில் என்ன நடக்குமோ, ரோஹினி எப்படியாவது மாட்டுவாரா என்பது தான் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
புதிய என்ட்ரி
ரோஹினி பற்றிய விஷயங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் நிலையில் புதிய என்ட்ரி குறித்து தகவல் வந்துள்ளது.
அதாவது தெய்வமகள் சீரியலில் வினோதியின் கணவராக நடித்த கணேஷ் இந்த சீரியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
விஜயாவின் தோழியாக நடிக்கும் பார்வதியுடன், கணேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இவர் சீரியலில் என்ட்ரி கொடுத்தால் செம ஜாலியாக தான் இருக்கும் என்கின்றனர்.
எனவே பார்வதியின் மகனாக இவர் என்ட்ரி கொடுக்கப்போகிறாரா அல்லது ரோஹினியின் அப்பாவாக வரப்போகிறாரா என நிறைய கேள்விகள் ரசிகர்களிடம் வலம் வருகிறது. என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.