ஜீ தமிழின் வீரா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்.. போட்டோ இதோ
ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரையில் இப்போதைய டிரண்டாக பெண்களை மையப்படுத்திய கதைகள் அதிகம் வருகிறது.
சன் டிவி சொல்லவே வேண்டும் மொத்தமும் பெண் கதாபாத்திரத்தை வைத்தே தான் சீரியல்கள் இருக்கும். அப்படி ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒரு பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய தொடர்களில் ஒன்றாக உள்ளது வீரா.
கடந்த 2024ம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் 300 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
நியூ என்ட்ரி
சின்னத்திரையில் ரசிகர்கள் கொண்டாடும் ஜோடிகளில் இந்த வீரா சீரியலில் நடிக்கும் வைஷ்ணவி-அருண் ஜோடிக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.
தற்போது இந்த சீரியல் குறித்து ஒரு புது தகவல் வந்துள்ளது, அதாவது பிரபல சீரியல் நடிகர் ராகவேந்திரா இன்றைய எபிசோட் முதல் பாலாஜி கதாபாத்திரத்தில் நடிக்க என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.