விஜய் டிவியின் மகாநதி சீரியலில் புதிய என்ட்ரி கொடுக்கும் நாயகி.. யார் தெரியுமா, அட இவர்தானா?
மகாநதி
சன் டிவியை தொடர்ந்து விஜய் டிவியில் நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் ஒன்று தான் மகாநதி.
கடந்த 2023ம் ஆண்டு 4 அக்கா-தங்கைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தொடர் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.
பிரவீன் பென்னட் இயக்க குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிக்கும் இந்த தொடரில் இளம் கலைஞர்கள் அதிகம் உள்ளார்கள்.
அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் இந்த தொடர் வரும் ஞாயிறு சிறப்பு தொகுப்பாக மாலை 2 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளது.
நாயகி யார்
இந்த தொடரில் புதிய என்ட்ரியாக ஒரு நாயகி வரப்போகும் காட்சியை தொடரில் காட்டிவிட்டார்கள். அவர் விஜய்யின் முன்னாள் காதலியாக இருப்பார் என்று கணித்த ரசிகர்கள் அவர் யாராக இருக்கும் என நிறைய பேசுகிறார்கள்.
அவர் வேறுயாரும் இல்லை விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து பிரபலம் ஆன கண்மணி மனோகரன் தானாம்.
இவருக்கு அண்மையில் பிரபல தொகுப்பாளருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.