சிம்வுக்கு ஜோடியாகும் அறிமுக நடிகை - 'வெந்து தணிந்தது காடு' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

heroine simbu gautham menon venthu thaninthathu kadu
By Kathick Aug 09, 2021 09:20 AM GMT
Report

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகிவரும் திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.

வேல்ஸ் இன்டெர்னஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரிக்க, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

சமீபத்தில் தான், இப்படத்தின் First லுக் போஸ்டர் வெளியானது. இதில் சிம்புவை பார்ப்பதற்கு, இளம் வயது வாலிபன் போல் தோற்றமளித்தார்.

மேலும், இன்று காலை, நடிகை ராதிகா 'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை, தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சானோன் நடிக்கவிருப்பதாக தகவல் கூறப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது இப்படத்தில் சிம்புக்கு ஜோடியாக இளம் நடிகை Kayadu Lohar என்பவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிம்வுக்கு ஜோடியாகும் அறிமுக நடிகை -

இவர் ஏற்கனவே சில கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளாராம். மேலும், இப்படம் தான் இவருக்கு தமிழில் அறிமுக படம் என்று கூறுகின்றனர்.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US