Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் புதியதாக தனது மனைவியுடன் இணைந்துள்ள பிரபல சீரியல் நடிகர்.. யாரு பாருங்க
Mr&Mrs சின்னத்திரை
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்று தனி வரவேற்பு இருக்கும்.
சூப்பர் சிங்கர், நடன நிகழ்ச்சி, கலக்கப்போவது யாரு, அதுஇதுஎது என இப்படி விஜய்யில் ஒளிபரப்பான நிறைய ஹிட் ஷோக்களை கூறிக்கொண்டே போகலாம்.
அப்படி அண்மையில் பிரபல ஹிட் நிகழ்ச்சியான Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்கப்பட்டது.
மாகாபா ஆனந்த் மற்றும் நிஷா தொகுத்து வழங்க, நடிகை ராதா மற்றும் தொகுப்பாளர் கோபிநாத் நடுவர்களாக உள்ளார்கள்.
போட்டியாளர்
இந்த 5வது சீசனில் நாம் பார்த்து பழக்கப்பட்ட பிரபலங்கள் தான் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் யார் யார் என முதல் வார ஷோவில் நாம் பார்த்துவிட்டோம்.
தற்போது என்ன தகவல் என்றால் இந்த ஷோவில் புதியதாக ஒரு சீரியல் நடிகர் தனது மனைவியுடன் இணைந்துள்ளார்.
அவர் வேறுயாரும் இல்லை ஜீ தமிழ் சீரியல் மூலம் பிரபலம் ஆன புவிஅரசு தனது மனைவி பிரியாவுடன் கலந்துகொண்டுள்ளார்.

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri
