சன் டிவியின் மல்லி சீரியலில் களமிறங்கும் புதிய ஜோடி... முழு விவரம்...
சன் டிவி
சன் டிவி என்றாலே கடந்த சில நாட்களாக ஒரு விஷயம் பேசப்பட்டது, என்னது அனிருத்-காவ்யா திருமணம் பற்றி தான்.
அண்மையில் திருமணம் முடித்த கையோடு காவ்யா மாறன் சன் நெட்வொர்க்கில் பணிபுரியும் அனைவருக்கும் விருந்து வைத்துள்ளார். அந்த புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் வெளியாகி வைரலாகி இருந்தன.
சரி நாம் இப்போது சன் டிவி சீரியல் குறித்து வந்த தகவலை பார்ப்போம். சன் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று தான் மல்லி.
இதில் நிகிதா ராஜேஷ் நாயகியாக நடிக்க விஜய் வெங்கடேசன் நாயகனாக நடித்துள்ளார். இவர்களை தாண்டி மகாலட்சுமி சங்கர், நளினி, நிரஞ்சனா, பாரதி மோகன், கிருத்திகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

புதிய கதைக்களம்
மல்லி சீரியல் வெற்றிகரமாக ஒளிபரப்பாக தற்போது மல்லி 2.0 விரைவில் ஒளிபரப்பாக துவங்க உள்ளதாம். புதிய கதைக்களத்துடன் துவங்க இருக்கும் இந்த சீரியலில் நாயகனாக ஜிஷ்ணு நடிக்க ஹரிக்கா சாடு நாயகியாக நடிக்கிறாராம்.
கதிர், மல்லிகா கதாபாத்திரத்தில் இருவரும் நடிக்க இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம்.