பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் வேறொரு லுக்கில் கண்ணன் மற்றும் முல்லை எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா?- லேட்டஸ்ட்
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பெருமை உள்ளது.
அது என்னவென்றால் மற்ற மொழிகளில் ஹிட்டான சீரியல்கள் தான் தமிழில் ரீமேக் ஆகும்.
ஆனால் தமிழில் உருவாக்கப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
சாதாரண குடும்பத்தின் ஒரு கதை, அதை அழகாக கொண்டு செல்கின்றனர் சீரியல் குழுவினர். இந்த சீரியலில் சித்ரா மறைவுக்கு பின் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவ்யா.
இவரை மக்கள் ஆரம்பத்தில் ஏற்கவில்லை என்றாலும் இப்போது பழகிவிட்டனர்.
அண்மையில் காவ்யா படப்பிடிப்பில் மாடர்ன் உடையில் அந்த சீரியலில் கண்ணன் வேடத்தில் நடிக்கும் குமரன் என்பவருடன் ஒரு சூப்பர் புகைப்படம் எடுத்துள்ளார்.
அதனை தனது இன்ஸ்டா ஸ்டோரியிலும் பதிவு செய்துள்ளார்.