பிக்பாஸ் 6வது சீசனில் புதிய காதல் ஜோடி உருவாகிறார்களா?- அவரே வெளிப்படுத்துகிறாரே?
பிக்பாஸ் 6
பிக்பாஸ் 6வது சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் தொடங்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் 5 பேர் இதுவரை வெளியேறிவிட்டார்கள்.
இந்த வாரம் மக்கள் எதிர்ப்பார்க்காத பிரபலங்கள் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகியுள்ளனர். இதில் யார் அதிக வாக்குகள் பெற்று காப்பாற்றப்படுகிறார், யார் வெளியேறப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
புதிய காதல்
எல்லா பிக்பாஸ் சீசன்களிலும் ஒரு காதல் ஜோடி உருவாகிவிடும். நாமும் எல்லா பிக்பாஸிலும் பார்த்துள்ளோம். தற்போது இந்த சீசனில் காதலுக்கு இப்போது தான் ஆரம்பம் வந்துள்ளது.
வீட்டில் அவ்வளவாக பிரபலம் அடையாமல் இருப்பவர் கதிரவன். இவர் மீது கிரஷ் இருப்பதாக 2 பேர் கூறியுள்ளனர். ஷெரினா-கதிரவன் காதலிப்பதாக முதலில் கூறப்பட்டது, பின் மகேஷ்வரி தீபாவளி சமயத்தில் கதிரவன் மீது தனக்கு கிரஷ் இருப்பதாக கூறியிருந்தார்.
இப்போது என்னவென்றால் ஷிவின் கதிரவனிடமே தனக்குள் இருக்கும் கிரஷ்ஷை வெளிப்படுத்தியுள்ளார்.
பிக்பாஸ் விக்ரமன் சன் டிவியின் இந்த தொடரில் நடித்துள்ளாரா?- இது எத்தனை பேருக்கு தெரியும்