விக்ரம் படத்திற்கு முன் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய திரைப்படம்..! அதிலும் விஜய் தானா?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய திரையுலகில் தேடப்படும் மிக முக்கிய இயக்குனராகி விட்டார்.
இவர் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் வெளியான மாஸ்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஆகியுள்ளது.
அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கவிருந்த நிலையில், அப்படம் தள்ளி போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விக்ரம் படத்தை ஆரம்பிக்கும் முன் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.
ஆம், மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்த படத்தில் மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan