விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் ரசிகர்களுக்கு வந்த புதிய தகவல்.. என்ன தெரியுமா?
சின்ன மருமகள்
விஜய் டிவியில் ரசிகர்கள் கொண்டாடும் நிறைய ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது, அதில் ஒன்று தான் சின்ன மருமகள்.
கடந்த வருடம் ஜனவரி 22ம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடரில் கௌரி ஜானு, ரவீன்குமார், தாமரை செல்வி, சங்கவி என பலர் நடித்து வருகின்றனர்.
படிக்க வேண்டும் சாதிக்க வேண்டும் என லட்சியத்துடன் இருந்த தமிழ்ச்செல்வி என்ற பெண்ணிற்கு எதிர்ப்பார்க்காத விதமாக திருமணம் நடக்க அதனால் பிரச்சனைகளையும் சந்திக்கிறார்.
புதிய நேரம்
சமீபத்தில் கதையில் நாயகன்-நாயகி காட்டில் யானையிடம் சிக்கி தவிக்கும் பரபரப்பான காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தது.
சின்னத்திரையில் முதல் முயற்சியாக சின்ன மருமகள் சீரியல் குழுவினர் செய்திருந்தனர்.
தற்போது என்ன தகவல் என்றால் வரும் திங்கட்கிழமை முதல் சின்ன மருமகள் சீரியல் இனி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri

ரயில் விபத்தில் 3 மாணவர்கள் பலி; உண்மை காரணம் என்ன? கேட் கீப்பர் அதிர்ச்சி வாக்குமூலம் IBC Tamilnadu
