துளசி புதிய சீரியல் என்ட்ரி, பழைய சீரியல்களின் நேரத்தை மாற்றிய சன் டிவி... முழு விவரம்
சீரியல்
சன் டிவியில் தொடர்ந்து அடுத்தடுத்து 3 சீரியல்கள் முடிவுக்கு வருகிறது. புனிதா, மணமகளே வா என இரண்டு சீரியல்களின் கிளைமேக்ஸ் பற்றி முதலில் தகவல் வந்தது.
அடுத்து மூன்றாவதாக ரசிகர்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகும் ஆடுகளம் சீரியலும் முடிவுக்கு வருகிறதாம். இந்த தகவல் 3 சீரியல் ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் அடுத்து என்ன புதிய சீரியல் வரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு ஏற்றார் போல் சமீபத்தில் புதிய சீரியலின் புரொமோ ஒன்று வெளியானது.

மாற்றம்
அதாவது துளசி என்ற பெண்ணின் குடும்ப கதையாக சன் டிவியில் புதிய சீரியல் ஒன்று களமிறங்குகிறது.
இந்த சீரியலின் அறிவிப்பு முதலில் வெளியாக புரொமோ சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. புரொமோவிற்கும் ரசிகர்கள் நல்ல ஆதரவு கொடுத்தார்கள். புதிய சீரியல் துளசி களமிறங்க இருப்பதால் மற்றொரு பழைய சீரியலின் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பூங்கொடி சீரியல் இனி 12 மணிக்கும், துளசி சீரியல் 12.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாம்.