இந்திய சினிமாவில் இதுவரை நடக்காத விஷயம்.. துணை நின்ற ஜெயிலர்.. இதுவரை கண்டிராத வசூல் சாதனை
ஜெயிலர்
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க நெல்சன் இயக்கியிருந்தார்.
அளவுகடந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. புதுப்புது வசூல் சாதனைகளையும் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலர் திரைப்படம் செய்து வருகிறது.
இந்நிலையில், இதுவரை இந்திய சினிமா வரலாற்றில் நடந்திராத ஒரு விஷயம் கடந்த வாரம் நடந்துள்ளது. இந்திய சினிமாவில் கடந்த வார இறுதி தான் அதிக வசூல் வந்த வாரம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சினிமாவில் புதிய சாதனை
அதாவது கடந்த வாரம் 11, 12 மற்றும் 13ஆம் தேதிகளில் ஜெயிலர், Gadar 2, போலா ஷங்கர் மற்றும் OMG 2 ஆகிய நான்கு படங்களும் இணைந்து ரூ. 390 கோடி வரை வசூல் செய்துள்ளது.
மேலும் 2.1 கோடி மக்கள் இந்த படங்களை பார்த்துள்ளனர். இதுவே இந்திய சினிமாவில் முதல் முறையாக நடக்கிறதாம். இதில் ஜெயிலர் மற்றும் Gadar 2 படங்கள் அதிக வசூலை குவித்துள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.
40 வயது நடிகருக்கு முதல் முறையாக ஜோடியாகும் ராஷ்மிகா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
