பூங்காற்று திரும்புமா தொடரை தொடர்ந்து விஜய் டிவியில் வரப்போகும் புதிய சீரியல்... இந்த தொடரா?
பூங்காற்று திரும்புமா
விஜய் டிவியில் பழைய சீரியல்கள் முடிவதும், புத்தம் புதிய தொடர்கள் களமிறங்குவதும் அதிகமாக உள்ளது.
இளசுகளின் வரவேற்பு பெற்ற நீ நான் காதல் சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக கூறப்பட்டது, ஆனால் எப்போது என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.
இந்த தொடர் முடிவுக்கு வரப்போகிறது என்ற தகவல் வருவதற்கு முன்பே பூங்காற்று திரும்புமா என்ற புதிய சீரியலின் புரொமோ வெளியாகி இருந்தது.
முத்தழகு சீரியல் புகழ் நடிகை ஷோபனா தான் இந்த புதிய தொடரில் முக்கிய நாயகியாக நடிக்கிறார்.
புதிய சீரியல்
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது Starmaa தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த Maguva O Maguva என்ற சீரியல் தமிழில் ரீமேக் ஆக உள்ளதாம்.
நெஞ்சம் மறப்பதில்லை சீரியலை தயாரித்த Kala Communications தான் இந்த புதிய சீரியலை தயாரிக்க இருக்கிறார்களாம்.

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
