ஜீ தமிழில் வரும் புதிய சீரியல் 'அண்ணாமலை குடும்பம்'.. ஒளிபரப்பு நேரம் எப்போது தெரியுமா?
புதிய சீரியல்
தமிழக மக்கள் இடையே பேராதரவை பெற்றிருக்கும் ஜீ தமிழ் சேனலில் கார்த்திகை தீபம், அண்ணா, வீரா என சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அதே போல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமபா நிகழ்ச்சிக்கும் அமோக வரவேற்பை மக்கள் கொடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக அண்ணாமலை குடும்பம் என்கிற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலில் நடிகை ரூபா, ஆஷிஷ் சக்கரவர்த்தி, விஜே தீபிகா, சாச்சனா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
கதறி அழுத ஜனனி.. சக்தியை கொன்று விடுவேன் என மிரட்டும் குணசேகரன்! எதிர்நீச்சல் சீரியலில் இன்று நடக்கப்போவது இதுதான்
ஒளிபரப்பு நேரம் எப்போது?
அண்ணாமலை குடும்பம் சீரியலில் அறிவிப்பு வீடியோ ஏற்கனவே வெளிவந்த நிலையில், தற்போது இந்த சீரியலின் ஒளிபரப்பு நேரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, அண்ணாமலை குடும்பம் சீரியல் வருகிற நவம்பர் 24ஆம் தேதி முதல் பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.