தமிழ் சின்னத்திரையில் புதியதாக களமிறங்கப்போகும் புதிய சீரியல்... எந்த டிவி தெரியுமா?
புதிய சீரியல்
தமிழ் சின்னத்திரை இப்போது வெள்ளித்திரையை தாண்டி மிகவும் கெத்தாக ஒளிபரப்பாகி வருகிறது.
பட பிரபலங்களை தாண்டி சின்னத்திரை பிரபலங்களின் இன்ஸ்டா பக்கத்தில் தான் ரசிகர்களாக குவிகிறார்கள். சீரியல்களுக்கு தான் இப்போது மக்களிடம் மவுசு உள்ளது என்பதை எல்லா நடிகர்களும் தெரிந்துகொள்ள சின்னத்திரையிலேயே அதிகம் களமிறங்குகிறார்கள்.
கலைஞர் டிவி
சன், விஜய், ஜீ தமிழ் என எல்லா தொலைக்காட்சிகளிலும் டிஆர்பியில் குறையும் தொடர்களை முடித்து புத்தம் புதிய சீரியல்களை களமிறக்கி வருகிறார்கள்.
அப்படி இப்போது விரைவில் களமிறங்கப்போகும் புதிய சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது கலைஞர் தொலைக்காட்சியில் வரும் செப்டம்பர் 29ம் தேதி முதல் திங்கள் முதல் சனி வரை ருத்ரா என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாம்.
இந்த தொடர் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறதாம்.