சன் டிவியில் விரைவில் வரப்போகும் புத்தம் புதிய சீரியல்... புரொமோவுடன் இதோ
சன் டிவி
சன் டிவி, எப்போதுமே சீரியல்களின் ராஜாவாக இருப்பவர்கள். காலை தொடங்கி இரவு வரை சீரியல்களை வெற்றிகரமாக ஒளிபரப்பி வருகிறது.
சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, கயல், மருமகள், எதிர்நீச்சல் தொடர்கிறது, அன்னம் போன்ற தொடர்களின் ரசிகர்களின் பேராதரவுடன் டிஆர்பியில் கலக்கி வருகிறது.
இப்போது சன் டிவி சீரியல்களில் ஹைலைட் என்றால் அன்னம்-மருமகள்-கயல் தொடர்களின் மகா சங்கம எபிசோடுகள் தான்.
புதிய தொடர்
இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒரு தொடருக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது, அது என்ன தொடர் என்றால் ஹிந்தியில் தயாராகி தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகும் இராமாயணம் தொடர் தான்.
இப்போது கதையும் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் அடுத்த தொடருக்கு சன் டிவி தயாராகிவிட்டார்கள்.
அதாவது அனுமனின் கதையை கூறும் வகையில் தயாரான கதையை இனி சன் டிவி ஒளிபரப்ப உள்ளார்களாம். வரும் திங்கள் முதல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.