பைரவி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புத்தம்புதிய சீரியல்... நாயகன், நாயகி யார் தெரியுமா?
சீரியல்களை மாஸாக ஒளிபரப்பாகி தமிழ் சின்னத்திரையில் பல வருடங்களாக கெத்து காட்டிவரும் தொலைக்காட்சி தான் சன் டிவி.
மூன்று முடிச்சு, சிங்கப்பெண்ணே, மருமகள், அன்னம், எதிர்நீச்சல் தொடர்கிறது என ஏகப்பட்ட சீரியல்கள் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
கடைசியாக சன் டிவியில் மருமகள்-மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே என்ற 3 சீரியல்களின் மகா சங்கமம் நடந்தது. இதில் முக்கியமாக பார்க்க நினைத்த ரசிகர்களுக்காக ஒரு காட்சி அமைந்தது.

அதாவது சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி யாரால் கர்ப்பமானார் என்ற உண்மை வெளிவரும் காட்சியை பார்க்க ஆவலாக இருக்க இந்த மகா சங்கமத்தில் வெளிவந்தது.
பைரவி சீரியல்
5 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த கயல் சீரியல் சில வாரங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது.

அந்த சீரியல் முடிவடைந்த நிலையில் அடுத்து பைரவி என்ற தொடர் ஒளிபரப்பாக துவங்கியுள்ளது. இப்போது கதையில் பைரவி விபத்தில் தனது மொத்த குடும்பத்தை இழந்து இப்போது எங்கே செல்வது என தெரியாமல் தவித்து வருகிறார்.
புதிய சீரியல்
கடைசியாக சன் டிவியில் பைரவி சீரியல் ஒளிபரப்பாக துவங்கிய நிலையில் இப்போது அடுத்த புதிய சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது.
அதாவது சன் டிவியில் பல சீரியல்கள் நடித்துள்ள ஜிஷ்ணு மற்றும் ஹரிகாசாடு முதன்முறையாக ஜோடி சேர்ந்து ஒரு புதிய தொடர் நடித்துள்ளனர். இந்த மல்லி 2.0 என பெயர் வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.