அண்ணாமலை சீரியலை தொடர்ந்து ஜீ தமிழில் வரப்போகும் புதிய சீரியல்... ஆரம்பம் எப்போது?
ஜீ தமிழ்
தமிழ் சின்னத்திரையில் மக்கள் கொண்டாடும் தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். சீரியல்கள் தொடங்கி ரியாலிட்டி ஷோக்கள் என மக்களுக்கு பிடித்தார் போல் ஒளிபரப்பி ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார்கள்.
இதில் ஒளிபரப்பாகும் சரிகமப பாடல் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அதேபோல் கார்த்திகை தீபம், அண்ணா, கெட்டி மேளம் போன்ற தொடர்களுக்கும் தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது.

புதிய தொடர்
விரைவில் ஜீ தமிழில் அண்ணாமலை குடும்பம் ஒளிபரப்பாக உள்ளது. இந்த புதிய சீரியலின் அறிவிப்பு, புரொமோக்கள் எல்லாம் ஏற்கெனவே வெளியாகிவிட்டது.
இந்த தொடரை தொடர்ந்து தற்போது மற்றொரு புதிய சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது தெலுங்கு படு ஹிட்டான Chiranjeevilakshmisowbhagyavathi என்ற தொடர் தமிழில் டப் செய்து ஒளிபரப்பாக உள்ளதாம்.
வரும் நவம்பர் 24ம் தேதி முதல் அவள் வருவாளா என்ற பெயரில் மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri