ஜீ தமிழில் வரப்போகும் மேலும் ஒரு புதிய சீரியல்- விஜய் டிவியின் இந்த தொடர் நாயகியா நடிக்கப்போகிறார்?
தமிழ்நாட்டில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சிகளாக சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் இருக்கின்றன.
சன் தொலைக்காட்சியில் தொடர்கள் ஒளிபரப்புவது அதிகம் என்றாலும் மற்ற இரண்டு தொலைக்காட்சிகளில் வரும் தொடர்களும் மக்களிடம் செம ஹிட்.
TRPயில் சீரியல்கள் மாற்றி மாற்றி இடம்பெறுகின்றன. கடந்த சில மாதங்களாக பழைய தொடர்கள் முடிக்கப்பட்டு புத்தம் புதிய சீரியல்கள் வருகின்றன.
அப்படி நமக்கு கிடைக்கும் தகவல்களையும் அறிவித்து வருகிறோம்.
இப்போது ஜீ தமிழில் இன்னொரு புதிய சீரியலும் வருகிறது.
விஜய்யில் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் முக்கிய நடிகையாக நடித்த தேஜஸ்வினி முக்கிய நாயகியாக இந்த புதிய சீரியலில் நடிக்கிறாராம், நாயகனாக இனியன் நடிக்க நிஹாரிகா, சத்யன் ஆகியோரும் இந்த புதிய சீரியலில் நடிக்கிறார்களாம்.
சீரியலுக்கு வித்யா நம்பர் 1 என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.