சர்ச்சையில் சிக்கிய 'தென்றல் வந்து என்னை தொடும்' சீரியல் எப்போது ஒளிபரப்பு ஆகிறது தெரியுமா.. இதோ
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகண்ட சீரியல்களில் ஒன்று சுந்தரி நீயும் சுந்தரன் நானும்.
இந்த சீரியல் மூலம் சின்னத்திரையில், கதாநாயகனாக அறிமுகமானவர் வினோத் பாபு. இவர் இதற்கு முன் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.
மேலும் தற்போது விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள ' தென்றல் வந்து என்னை தொடும்' சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக, கதாநாயகியாக கதாபாத்திரத்தில் சின்னத்திரையின் முன்னணி நடிகை பவித்ரா நடித்துள்ளார்.
இந்த சீரியல் குறித்து வெளியான முதல் ப்ரோமோவே சமூகத்தில் பல சர்ச்சைகளில் சிக்கியது.
இந்நிலையில் தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் வரும் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தென்றல் வந்து என்னைத் தொடும் - ஆகஸ்ட் 16 முதல் திங்கள் to சனி மதியம் 3 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #ThendralVanthuEnnaiThodum #VijayTelevision pic.twitter.com/QrftpD7axk
— Vijay Television (@vijaytelevision) August 8, 2021