அடிச்சு விரட்டிய ஹேமந்த்! சித்ராவின் தற்கொலை குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்! உண்மையை உடைத்த முக்கிய நபர்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் நடிகை சித்ரா கடந்த சில நாட்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவத்தில் சித்ராவின் கணவர் ஹேமந்த் தான் தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்பட்டதால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சித்ராவின் மரணம் குறித்து அவரது பெற்றோர், உறவினர்கள், படக்குழுவினர், நட்பு வட்டாரம், ஹேமந்தின் குடும்பத்தினர் என பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சித்ராவின் ரசிகரும் முன்னாள் உதவியாளருமான சலீம் தற்போது பல விசயங்களை கூறியுள்ளார்.
இதில் சித்ரா மற்றும் ஹேமந்த் இருவரும் டி நகர் வீட்டில் தங்கியிருந்தபோது அவர்களுக்கிடையே மிகப்பெரிய சண்டை வந்தது என்றும், ஹேமந்த் எந்த வேலையும் செய்யமாட்டார் என்றும், சித்ரா ஷூட்டிங்கில் இருக்கும் போதும் அவருக்கு அடிக்கடி ஹேமந்த் போன் பண்ணிக்கொண்டே இருப்பார் என்றும் என்னை ஆரம்பத்திலிருந்தே அவர் வில்லனாக பார்த்தார் எனவும் கூறியுள்ளார்.
மேலும் சித்ராவை வீடியோ எடுப்பது, புகைப்படங்கள் என உதவியாளராக வேலை செய்து வந்த என்னை ஹேமந்த் தவறாகவே நினைத்தார் என்றும், நான் சித்ராவின் புகைப்படங்களை வைத்து சம்பாதிக்கிறேனோ என்று சந்தேகித்தார், தவறாகவும் புரிந்து கொண்டார், ஒரு கட்டத்தில் என் செல்போனை பிடுங்கி சித்ராவின் வீடியோவை, புகைப்படங்களை அழித்துவிட்டதுடன் என்னை அடித்து விரட்டினார் எனவும் சலீம் கூறியுள்ளார்.
சித்ரா மற்றும் ஹேமந்த் தங்கியிருந்த வீட்டில் சலீம் தங்கியிருந்தாராம்.