மாஸ்டர் படத்தின் புதிய மூன்று போஸ்டர்களுடன் வெளியாகவுள்ள ட்ரைலர் அப்டேட், வேற லெவல் புகைப்படங்களுடன் இதோ..
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோஎக்ஸ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர், இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் நீண்ட நாட்களாக இப்படத்தின் வெளியீடு குறித்து காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்று கொண்டாட்டம் அளிக்கும் வகையில் அப்டேட் வெளியானது.
ஆம் அதில் மாஸ்டர் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக வரும் ஜனவரி மாதம் 13 ஆம் தேதி அன்று மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில் மாஸ்டர் படத்தின் ட்ரைலரில் விஜய் பேசும் வசனமெல்லாம் வரும் என கூறியிருந்தார்.
இதை வைத்து பார்க்கும் போது மாஸ்டர் படத்தின் ட்ரைலர் அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரியவந்துள்ளது.
அந்த வகையில் தற்போது மாஸ்டர் படத்தின் புத்தம் புதிய போஸ்டர்கள் ரசிகர்களிடையே பரவி வருகிறது, இதோ அந்த போஸ்டர்கள்..

