விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் ஒளிபரப்பாகும் நேரம் மாற்றம்... இனி எப்போது தெரியுமா?
சின்ன மருமகள்
கிராமத்து பின்னணியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் தான் சின்ன மருமகள். வசதி இல்லாத அப்பாவிற்கு பிறந்த தமிழ்செல்வி என்ற பெண் தனது படிப்பின் மூலம் உயர்ந்து மருத்துவராக வேண்டும் என ஆசைப்பட்டாள்.
ஆனால் அவரது அப்பா பண ஆசையில் திருமணம் செய்துவைக்க அதனால் அவரது வாழ்க்கையே மாறிவிட்டது.
இப்போது கர்ப்பமாக இருக்கும் தமிழ்ச்செல்வி, படித்துக்கொண்டே குடும்ப பிரச்சனைகளையும் சமாளித்து வருகிறார்.

மாற்றம்
கதையில் இப்போது சேது நீதிமன்றத்தில் போட்ட விவாகரத்து வழக்கை வாபஸ் வாங்குகிறார். அப்படியாவது தமிழ் தன்னை மன்னிப்பாள் என நம்பி சேது இப்படியொரு விஷயம் செய்துள்ளார்.
ஆனால் தமிழ்ச்செல்விக்கு சேது மீது உள்ள கோபம் சுத்தமாக மாறவில்லை, அடுத்து கதையில் என்ன நடக்கும் தெரியவில்லை.
இந்த நேரத்தில் சின்ன மருமகள் சீரியல் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ள தகவல் வந்துள்ளது. அதாவது இனி சின்ன மருமகள் சீரியல் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.