ரசிகர்கள் ஆவலுடன் பார்க்கும் மகாநதி சீரியலில் டுவிஸ்ட் வைத்த இயக்குனர்.. வைரலாகும் போட்டோ
மகாநதி சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் இளைஞர்களால் அதிகம் கொண்டாடப்படும் தொடராக உள்ளது மகாநதி.
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்கிவரும் இந்த சீரியல் அப்பாவை இழந்த 4 பெண்களின் கதையாக தொடங்கி இப்போது விஜய்-காவேரியின் கதையாக ஓடிக் கொண்டிருக்கிறது.
மனதால் இணைந்தாலும் சூழ்நிலையால் விலகியுள்ள இவர்கள் எப்போது இணைவார்கள் என்பதை பார்க்க தான் மக்களும் ஆவலாக உள்ளனர்.
வைரல் போட்டோ
விஜய்-காவேரி இணைய பிரச்சனையாக இருப்பது வெண்ணிலா தான்.
பழைய விஷயங்களை மறந்து இருந்து இவருக்கு மீண்டும் எல்லாம் நியாபகம் வந்துவிட்டது. விஜய்யுடன் பழைய நினைவுகளோடு பேச ஆரம்பிக்கிறார், அவரோ தனக்கு திருமணம் ஆன விஷயத்தை சொல்ல முடியாமல் தவித்து வருகிறார்.
இந்த நிலையில் இயக்குனர் பிரவீன் பென்னட் தனது இன்ஸ்டாவில் விஜய் மற்றும் வெண்ணிலா கட்டியணைத்து நிற்பது போல ஒரு புகைப்படம் வெளியிட்ட Sorry Guys என பதிவு செய்துள்ளார்.
இதனால் அடுத்தடுத்த கதைக்களம் இதுதான் என ரசிகர்கள் ஒவ்வொருவரும் ஒரு திரைக்கதை அமைத்து வருகிறார்கள்.