பாக்கியலட்சுமி சீரியலில் திடீரென அதிரடி டுவிஸ்ட்... ரசிகர்கள் இத எதிர்ப்பார்க்கலயே
பாக்கியலட்சுமி
ஒரு குடும்ப தலைவியின் போராட்ட கதையாக விஜய் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட தொடர் பாக்கியலட்சுமி.
கடந்த 2020ம் ஆண்டு ஜுலை மாதம் 27ம் தேதி தொடங்கப்பட்ட இந்த தொடர் 1220 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
பெங்காலி தொடரான ஸ்ரீமோயி தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பான இந்த தொடரில் இப்போது நிறைய மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.
கதை செல்லும் விதத்தை பார்க்கும் போது முடிவை எட்டி வருவதாக தெரிகிறது.
புதிய டுவிஸ்ட்
பாக்கியா ஹோட்டல் பிரச்சனை முடிந்தது, எழில் படமும் வெளியாக உள்ளது. கோபி-ராதிகா விவாகரத்தும் முடிந்தது, இப்போது இனியாவின் புதிய காதல் கதை வர இருக்கிறது.
அந்த நபர் பாக்கியாவின் புதிய ரெஸ்டாரன்ட் திறப்பு விழாவிற்கு வர அங்கு தான் டுவிஸ்ட். அவர் யார் என்று பார்த்தால் பாக்கியாவின் ஒரு கை என இருக்கும் செல்வியின் மகன் தான் இனியா காதலிக்கும் புதிய நபர்.
இதனை பார்த்ததும் ரசிகர்கள் அட இந்த டுவிஸ்ட்டை நாங்கள் எதிர்ப்பார்க்கவே இல்லையே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
