விஜய் டிவியின் ஹிட் ஷோ குக் வித் கோமாளி சீசன் 6 எப்போது தொடக்கம்?.. என்ட்ரி கொடுக்கும் புதிய பிரபலம்
குக் வித் கோமாளி 6
அன்றாட பிஸியான வாழ்க்கையில் மக்கள் அனைவருமே ஒரு விஷயத்தை மறந்துவிட்டார்கள்.
அது என்னது சிரிப்பது தான், மகிழ்ச்சி, சிரிப்பது எல்லாம் என்ன என்று கேட்கும் அளவிற்கு வேலை வேலை என ஓடுகிறார்கள். அப்படி பிஸியாக இருந்தவர்களையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த ஒரு ஷோவாக இருந்தது விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி.
சமையல் ப்ளஸ் நிறைய கலாட்டா என்ற கான்செப்டில் உருவான இந்த நிகழ்ச்சியின் 5 சீசன் இதுவரை முடிந்துள்ளது.
புதிய சீசன்
ரசிகர்கள் கொஞ்சம் வெறுத்த குக் வித் கோமாளி சீசன் என்றால் அது 5வது சீசன் என்றே கூறலாம்.
ப்ளஸ்ஸாக குக் வித் கோமாளியில் பார்க்கப்பட்ட விஷயம் இல்லை என்பது மக்களின் கருத்தாக இருந்தது. இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 6 குறித்து ஷகீலா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அதில் அவர், ஒரு நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜை சந்தித்ததாகவும், அவரிடம் 6வது சீசன் குறித்து கேட்டபோது ஏப்ரல் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக அவர் கூறியதாக ஷகீலா தெரிவித்துள்ளார்.
அதோடு இந்த 6வது சீசன் மூலம் தொகுப்பாளராக ஜாக்குலின் களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan
