புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு OTT - க்கு வரும் சூப்பர் ஹிட் படங்கள்.. லிஸ்ட் இதோ
ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை எப்படி திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அதே போல் ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து கொண்டு இருப்பார்கள்.
தற்போது, 2024ம் ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த வருடம் தொடக்கத்தில் OTT - ல் வெளியாகும் படங்கள் குறித்த லிஸ்ட் வெளியாகி உள்ளது. அது குறித்து கீழே காணலாம்.
புஷ்பா 2 தி ரூல்:
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.1500 கோடிக்கு மேல் வசூல் செய்து மாஸ் ஹிட் கொடுத்துள்ளது. இப்படம் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
விடுதலை 2:
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் விடுதலை 2. இப்படம் ஜீ5 OTT தளத்தில் ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.
யுஐ:
கன்னட நடிகர் உபேந்திராவின் நடிப்பில் டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் யுஐ. இப்படத்தின் OTT உரிமையை சன் நெக்ஸ்ட் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.