செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரா இது? போட்டோ பார்த்து ரம்யா பாண்டியன் என நினைத்த நெட்டிசன்கள்
பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வருகிறார் கண்மணி சேகர். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் கண்மணிக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு 20 ஆயிரம், 30 ஆயிரம் என லைக்குகள் குவியும்.
இந்நிலையில் கண்மணி சேகர் சமீபத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அம்மன் கடவுள் போல வேடம் அணிந்து அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருக்கிறார்.
அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் 'ரம்யா பாண்டியன் என முதலில் நினைச்சிட்டோம்' என கமெண்டில் கூறி வருகின்றனர். ரம்யா பாண்டியனும் சில காலத்திற்கு முன் அம்மன் போல போட்டோஷூட் நடத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.