எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி இல்லையா, இவர்தான் நடிக்கப்போகிறாரா?- இவர் பயங்கர வில்லனாச்சே
எதிர்நீச்சல் சீரியல்
கோலங்கள் என்ற வெற்றிகரமாக தொடருக்கு பிறகு திருச்செல்வம் இயக்கி வெற்றிகண்டு வரும் தொடர் தான் எதிர்நீச்சல். இந்த தொடர் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தியே கதை நகர்ந்து வருகிறது.
பெண்அடிமை படுத்தும் ஆண்களுக்கு மத்தியில் தனது சொந்த காலில் நிற்க போராடும் பெண்களின் கதையாக இப்போது கதை இருக்கிறது.
சொத்து விவகாரத்தில் அப்பத்தா என்ன முடிவு எடுக்கப்போகிறார் என கதை விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்க பெரிய அதிர்ச்சியாய் வந்தது தான் மாரிமுத்து அவர்களின் மரணம்.
அவரது மரணம் எல்லோருக்கும் கடும் துக்கத்தை கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
அடுத்து யார்
இனி ஆதி குணசேகரனாக நடிக்கப்போவது யார் என்பது தான் எதிர்நீச்சல் தொடர் ரசிகர்களின் பெரிய கேள்வியாக உள்ளது. வேல ராமமூர்த்தி இனி குணசேகரனாக நடிப்பார் என்று பார்த்தால் அவர் இன்னும் ஓகே சொல்லாதது போல் தெரிகிறது.
இப்போது கிடைத்துள்ள தகவல்படி குணசேகரனாக நடிக்க நடிகர் பசுபதிக்கு அதிக வாய்ப்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது, ஆனால் எந்த அளவிற்கு உண்மை தகவல் என தெரியவில்லை.

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
