சன் டிவி அடுத்து ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா?
சன் டிவி
சன் டிவி, சீரியல்களின் ராஜாவாக இருக்கும் ஒரு தொலைக்காட்சி. காலை 10 மணிக்கும் தொடங்கப்பட்ட சீரியல் இரவு 10 மணி வரை ஒளிபரப்பாகிறது.
இடையில் 3 மணிநேரம் மட்டும் படம் ஒளிபரப்பாகும். இதில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, கயல், எதிர்நீச்சல் தொடர்கிறது, மருமகள், அன்னம் போன்ற தொடர்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
வாரா வாரம் வரும் டிஆர்பியில் இந்த தொலைக்காட்சி தொடர்கள் தான் டாப்பில் வரும்.
மெகா சங்கமம்
டிஆர்பியில் உச்சம் தொட சன் டிவி சீரியல்களில் நிறைய விஷயங்கள் செய்து வருகிறார்கள்.
அப்படி அடுத்தடுத்து சீரியல்களின் மகா சங்கமங்கள் நடந்து வருகிறது. தற்போது அன்னம், கயல், மருமகள் தொடர்களின் சங்கமம் ஒளிபரப்பாகி வருகிறது. இதற்கு அடுத்து இலக்கியா மற்றும் லட்சுமி தொடர்களின் மகா சங்கமம் நடக்க உள்ளதாம்.