பல நாள் ரகசியத்தை தெரிந்துகொண்ட பாரதி, கண்ணம்மா என்ன செய்வார்- அடுத்து நடக்கப்போகும் அதிரடி
பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் கடந்த சில வாரங்களாக அழகான காட்சிகளாக அமைந்து வருகிறது.
குடும்பமாக பாரதியும், கண்ணம்மாவும் தங்களது குழந்தைகளுடன் அழகாக ஒரே வீட்டில் இருந்த காட்சிகள் எல்லாவற்றையும் மக்கள் ரசித்தார்கள்.
அடுத்து சீரியலில் அஞ்சலியின் சீமந்த நிகழ்ச்சி நடக்கும் என தெரிகிறது, படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் வெளியாகியிருக்கிறது.
இன்று ஒளிபரப்பாகும் சீரியலில் ஒரு அதிரடி காட்சியோடு முடிக்கிறார் இயக்குனர். மருத்துவமனையில் லக்ஷ்மியை சேர்க்கும் பாரதி அவர் கண்ணம்மாவின் மகள் என்பதை தெரிந்து கொள்கிறார்.
அடுத்து பாரதி என்ன செய்வார், கண்ணம்மா எப்படி சமாளிக்க போகிறார் என்பதை எல்லாம் அடுத்த வாரம் பொறுத்திருந்து பார்ப்போம்.