பாரதி கண்ணம்மாவில் அடுத்து நடக்கப்போகும் அதிரடி- லீக்கான தகவல்
பாரதி கண்ணம்மா விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். ஒரே ஒரு விஷயத்தை வெளிக்காட்டினார் கதையே முடிந்துவிடும், ஆனால் அதை செய்வதற்கு பதிலாக மற்ற எல்லா விஷயங்களையும் செய்கிறார் இயக்குனர்.
நடிகர்கள் மாற்றம்
வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தாலும் தொடரில் பல நடிகர்களின் மாற்றங்கள் நடந்துள்ளன. முதலில் அகிலன், அடுத்து முக்கிய நாயகியான ரோஷினி, இப்போது அஞ்சலி வேடத்தில் கண்மணியின் மாற்றம் என நடந்துள்ளது.
அடுத்து யாரும் மாறக்கூடாது கடவுளே என ரசிகர்களே வேண்டுதல் வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அடுத்து கதையின் திருப்பம்
ஹேமா தனது அப்பாவான பாரதிக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க முதலில் வெண்பா சரியான நபர் என யோசித்தார். ஆனால் இப்போது அது தவறு, தனது அப்பாவை சமையல் அம்மா கண்டிப்பாக பத்திரமாக பார்த்துக் கொள்வார் என யோசிக்கிறார்.
தற்போது அடுத்து கதையில் ஹேமா, பாரதி-கண்ணம்மா இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு எடுக்க, லட்சுமி என்ன நினைப்பார் என்பது கதைக்களமாக அமைய போகிறதாம்.
இதனை ஹேமா வேடத்தில் நடிக்கும் லிஷா இன்ஸ்டாவில் ஒரு பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அடிதடி அளவிற்கு சென்ற போட்டியாளர்கள் ! கைகலப்பில் நிரூப் - பாலாஜி..