கோலாகலமாக முடிந்த விஜய்-காவேரி வளைகாப்பு, குமரன் என்ட்ரியா?... மகாநதி சீரியல் படப்பிடிப்பு தள போட்டோ
மகாநதி சீரியல்
ஒரு சீரியலில் மெயின் ஜோடி ஹிட்டாகிவிட்டார்கள் என்றாலே ரசிகர்களால் வைரலாக கொண்டாடப்படுவார்கள்.
அப்படி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியல் மூலம் ஹிட்டாகி Vika Vika என கொண்டாடப்படும் ஜோடி தான் விஜய்-காவேரி. பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் குடும்பம், பாசம், காதல், காமெடி என அனைத்தும் கலந்து கலவையாக ஒளிபரப்பாகி வருகிறது.
கடைசியாக சீரியல் எபிசோடில், விஜய்-காவேரியின் வளைகாப்பு மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சியில் நிறைய ஸ்பெஷல் விஷயங்கள் அதுவும் ரசிகர்கள் ரசிக்கும்படி நிறைய காட்சிகள் வைத்திருந்தனர்.

அடுத்து என்ன
இந்த வாரம் மகிழ்ச்சியாக எபிசோட் முடிய அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என இப்போதே ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
கடைசி எபிசோடில் பொங்கல் கொண்டாட்ட பேச்சுகளுடள் முடிவடைந்த நிலையில் அந்த காட்சிகள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தள போட்டோஸ் வெளியாகியுள்ளது.
அதாவது பொங்கல் கொண்டாட்ட காட்சிகள் தான் படமாக்கப்பட்டுள்ளது, இதோ படப்பிடிப்பு தள போட்டோஸ்,